உறக்கத்தில் காணா சொப்பனம்

கொண்டை ஊசி வளைவுகளில்
வானம் கண் விழித்த வேளையில்
விரைந்து சென்ற வாகனத்தில்
ஜன்னல் ஓர உறக்கம்.

சிறு குலுங்கள் தலையை தட்டிட
விழித்து வழியோரம் பார்க்கையில்
நீரோடைக் கரை மீதினில்
இலை தீர்ந்த கிளைகளில்
கருஞ்சிறகு விரித்து வந்து
சின்ன பறவை அமர்ந்தது.

உறக்கத்தில் காணா சொப்பனம்
இவ்வுலகில் பல உண்டு என்றது.

 

Advertisements

இன்னொரு விடுதலை

பழயது தீயில் மூட்டி
பழமையை நெஞ்சில் சாற்றி
புதுமையை கண்ணில் நிறுத்தி
நேசத்தின் கைகள் பற்றி
இன்னொரு விடுதலை கேட்போம்.
பல வண்ணப் பூக்கள் கோர்த்து
மனமாலை சூடிக் கொள்வோம்.
நல் எண்ணம் கருவில் விதைத்து
சம உரிமை ஊட்டி வளர்ப்போம்.
கனவுக்கு சிறகிரண்டு தந்து
காற்றுடன் பயனிக்க சொல்வோம்.
நட்புக்கரம் கொண்டு தா தொழா !
பேதங்கள் தகர்த்திடுவோம்.
அது —
பச்சிளம் பிள்ளையின் மண அறையில் இல்லை
வாழ்வின் எல்லை கோரும் கல்லறையிலும் இல்லை
விடியலே வா! என அழைப்போம்
இன்னொரு விடுதலை கேட்போம்.

2888775716_77d6fe04af_b

எதிர் இசை

இயற்கையின் அனைப்பில்
கலந்து நின்று;
வானம் உருக்கித்தந்த
துளிகள் கோர்த்து;
காலம் சொல்லா
கவிதை இசைத்து;
மலையுச்சிதனில்
மேகம் தொட்டு;
கீதம் சேர்த்து
வீணை மீட்டினால்…
என் இசைக்கு
எதிர் இசை தந்தது
குயில் ஒன்று.

kuyillogo

வண்ணம் வறண்டது…

கொடி பூத்த பிள்ளை நான்
வானம் பார்த்து மணம் பகிர்ந்து
பனிச்சாரல் தாங்கி நகைத்திருந்தேன்
தெய்வ சன்னதி சேர புண்ணியம் என்று
பறித்து பிரித்து பற்றி சென்றனர்
தெய்வம் என்றால்… அது யாரொ? என்னவோ?
கூடை தவறி சாலை அணைத்தது
சக்கரம் ஒன்று மிதித்து மறைந்தது
என் வண்ணம் வறண்டது
இல்லா குரல் எனது
காற்றில் கலந்தது

3415772583_f2a8b0c629